ஓமலூர்:-
ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி சின்னவடகம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 39). கட்டிட மேஸ்திரி. அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.
அவர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2¼ பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து சேகர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.