ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு-மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி

நெல்லை பெருமாள்புரத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் திருட்டுப்போனது. மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

Update: 2022-12-21 21:22 GMT

நெல்லை பெருமாள்புரம் டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம்பிள்ளை மகன் சங்கரலிங்கம் (வயது 66). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு சென்றார். அவர் நேற்று வீடு திரும்பினார். அப்போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 15 கிராம் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதே போல் அப்பகுதியை சேர்ந்த சங்கரன் மனைவி செண்பகவள்ளி (70) தனது உறவினர் ஒருவர் ஏர்வாடியில் இறந்துவிட்டதால் அங்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு பணம், நகை எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

அதே போல் திருஞானசம்பந்தம் என்பவர் வீட்டிலும் மர்மநபர்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த 3 சம்பவங்கள் குறித்தும் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்