பேராசிரியர் வீட்டில் திருட்டு

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் பேராசிரியர் வீட்டில் திருட்டு நடந்தது.

Update: 2023-04-23 20:05 GMT

பாளையங்கோட்டை பெருமாள்புரம் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 46). நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான சேலத்திற்கு சென்று விட்டு நேற்று காலையில் ஊர் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த கேமராவை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரவி பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரின் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்