வக்கீல் வீட்டில் திருட்டு
வக்கீல் வீட்டில் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
பாளையங்கோட்டை அருகே கீழப்பாட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி பாப்பா (வயது 38). வக்கீலான இவரது வீட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு வைத்திருந்த சுமார் ரூ.79 ஆயிரம் மதிப்புள்ள ஒயரை மர்மநபர் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.