வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு

மூலைக்கரைப்பட்டி அருகே வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது.;

Update: 2022-10-18 19:59 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 59). கேரள மாநிலம் திருவல்லாவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதனால் இவரது வீட்டில் அவரது தாயார் செந்தூரம்மாள் (94) வசித்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஜனார்த்தனன் ஊருக்கு வந்து தனது தாயை கேரளாவுக்கு அழைத்து சென்றுவிட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லை.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

நேற்று காலை அக்கம்பக்கத்தினர் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து மூலைக்கரைப்பட்டி ேபாலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு திருட்டு போன பொருட்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்