மருந்து கடை ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு

மருந்து கடை ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு போனது.

Update: 2023-05-01 18:45 GMT


விக்கிரவாண்டி தாலுகா சித்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் சுற்றுலா முடித்துவிட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கிரில் கேட்டின் பூட்டு மற்றும் முன்பக்க மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 3 பவுன் நகை, 150 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.25 லட்சமாகும்.

இதுகுறித்து ரமேஷ், கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்