நயினார்கோவில்
பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் கிராமத்தில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கோவில் தெருவில் உள்ள மளிகை கடை பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றனர். மேலும் இந்த கடை அருகே குணசேகரன் மகன் சுரேஷ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடை பூட்டை உடைத்து கடையில் இருந்த 2500 ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நயினார்கோவில் பகுதியில் இரவு நேரங்களில் நடக்கும் திருட்டை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை உடனடியாக பிடித்து வியாபாரிகள், பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.