கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-04-26 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே தளக்காவூர் மானகிரியில் உள்ள அதளை நாயகி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மானகிரி-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 35 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் மற்றும் பரளி செல்வி வண்டியும், 2-வது பரிசை தானாவயல் வெங்கடாசலம் வண்டியும், 3-வது பரிசை ஐம்பது மேல்நகரம் ஆனந்தகல்யாணம் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 22 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் வண்டியும், 2-வது பரிசை தேவாரம் லெட்சுமணன் மற்றும் மானகிரி எஸ்.எம்.ஆர் இருதயராஜ் வண்டியும், 3-வது பரிசை கூத்தலூர் சாத்தையா வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும், 2-வது பரிசை கானாடுகாத்தான் ஆர்.எஸ்.கோழிக்கடை வண்டியும், 3-வது பரிசை மதகுபட்டி மாம்பழம் வெள்ளைக்கண்ணு மற்றும் பாகனேரி புகழேந்தி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்