காரைக்குடி அருகே பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சீறி பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளை பார்த்து பார்வையாளர்கள் வியந்தனர்.

Update: 2023-04-10 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சீறி பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளை பார்த்து பார்வையாளர்கள் வியந்தனர்.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயம்கொண்டான் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியன் கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஜெயம்கொண்டான்-பெத்தானேந்தல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 39 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தானாவயல் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் வண்டியும், 2-வது பரிசை சோழன்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிசாமி வண்டியும், 3-வது பரிசை பீர்கலைக்காடு அப்துல்ராசாக்பைசல் வண்டியும் பெற்றன. பின்னா் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கருவிடைசேரி சாத்தையா வண்டியும், 2-வது பரிசை மணமேல்குடி நண்பன் கோழிப்பண்ணை வண்டியும், 3-வது பரிசை பொய்யாதநல்லூர் கபீப்முகமது வண்டியும் பெற்றன.

சின்னமாட்டு வண்டி பந்தயம்

இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை பிடாரிக்காடு பிடாரியம்மன் வண்டியும், 2-வது பரிசை பீர்க்கலைக்காடு பசைல் மற்றும் வாளரமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமிசண்முகம் வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி ஹவுசிங்போர்டு கபிலன் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும், 2-வது பரிசை கே.புதுப்பட்டி கரைமேல் அய்யனார் வண்டியும், 3-வது பரிசை பள்ளத்தூர் ஹரிகிருஷ்ணன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயத்தின் போது மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றதை சாலையோரத்தில் நின்றிருந்த பார்ைவயாளர்கள் வியந்து பார்த்து ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்