இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

Update: 2023-03-22 18:45 GMT

சாயல்குடி,

கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோவில் மாசா திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடுஇ சின்ன மாடு என 33 ஜோடிகள் பந்தயத்தில் களமிறங்கின. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை விளாத்திகுளம் வீரஜோதி என்பவரது மாடும், இரண்டாம் பரிசை மதுரை மாவட்டம் திருப்பாலை விஷால் என்பவரது மாடும் மூன்றாவது பரிசை வேப்பங்குளம் நல்லுத்தேவர் என்பவரது மாடும் நான்காவது பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடும் பரிசுகள் பெற்றன.

சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசை தூத்துக்குடி மாவட்டம் சுரேஷ் குமார் என்பவரது மாடும், இரண்டாவது பரிசை மணக்கரை ராஜேந்திரன் என்பவரது மாடும், மூன்றாவது பரிசை பூலாங்கால் மந்திரமூர்த்தி என்பவரது மாடும், நான்காவது பரிசை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி என்பவரது மாடும் பெற்றன.

வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரியவள் விளையாட்டு கழகம் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்