காரைக்குடி அருகே பொங்கல் விழாவையொட்டி குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே பொங்கல் விழாவையொட்டி குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே பொங்கல் விழாவையொட்டி குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே தளக்காவூர் மானகிரியில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் மானகிரி-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 56 வண்டிகள் கலந்துகொண்டன. முதலில் நடைபெற்ற பெரியகுதிரை வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை திருச்சி சாமி வண்டியும், 2-வது பரிசை கல்லல் வெல்கம்பிரதர்ஸ் வண்டியும், 3-வது பரிசை காட்டுப்புலி ஆர்.எஸ்.ஆர். வண்டியும், 4-வது பரிசை திருச்சி பிலால் வண்டியும் பெற்றது.
அதன் பின்னர் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்துகொண்டன.
இந்த போட்டியில் முதல் பரிசை கூத்தலூர் சந்திரன் வண்டியும், 2-வது பரிசை புலிமலைப்பட்டி நீதிதேவன் வண்டியும், 3-வது பரிசை கானாடுகாத்தான் ஆர்.எஸ். கோழிக்கடை வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 29 வண்டிகள் கலந்துகொண்டன. இருபிரிவாக போட்டி நடைபெற்றது.
பரிசு, கேடயம்
முதலில் நடைபெற்ற பிரிவில் முதல் பரிசை குப்பச்சிபட்டி அன்புக்கரசி வண்டியும், 2-வது பரிசை கள்ளந்திரி ராமர் வண்டியும், 3-வது பரிசை மட்டங்கிப்பட்டி காவ்யா வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை திருமலை எம்.ஆர்.கே. கண்ணன் வண்டியும், 2-வது பரிசை துலையானூர் என்ஜினீயர் பாஸ்கரன் வண்டியும், 3-வது பரிசை ஆலத்துப்பட்டி முனீஸ்வரன் வண்டியும் பெற்றது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் வந்திருந்தனர்.