அ.காளாப்பூரில் மாட்டு வண்டி பந்தயம்

அ.காளாப்பூரில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-01-01 18:45 GMT

சிங்கம்புணரி,

அ.காளாப்பூரில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் மாமன்னர் பூலித்தேவன் நினைவு அறக்கட்டளை மற்றும் பாசறை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ஊர் அம்பலக்காரர் பார்த்திபன் அம்பலம் தலைமை தாங்கினார். ஐந்து நிலை மறவர் நாட்டு முதன்மை அம்பலக்காரர் சோலை அம்பலம், ஐந்து நிலை நாட்டு மறவர் பேரவை கவுரவ தலைவர் இளம்பரிதி கண்ணன், ஐந்து நிலை நாட்டு மறவர் பேரவை தலைவர் பொன் குணசேகரன், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், முறையூர் ஊராட்சி தலைவர் சுரேஷ், சிங்கம்புணரி நிலக்கிழார் மதுசூடியன் ஆண்டார் பிரதர்ஸ், தொழில் அதிபர் அசோக் அடைக்கப்பட்டார், தொழில் அதிபர் மோகன்சாமிக்குமார், குலமங்கலம் நிலக்கிழார் முத்துராமலிங்க திருப்பதி, வீரத்தாய் வேலுநாச்சியார் பேரவை நிறுவன தலைவர் வசந்தகுமார் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் தடய அறிவியல் துறை இயக்குனர், அனைத்து மறவர் நல கூட்டமைப்பு பொதுச்செயலாளர், முக்குலத்தோர் நல கூட்டமைப்பு தலைவர் விஜயகுமார் மற்றும் மறமன்னர் வாள்கோட்டை ராயர் ராமநாதபுர மன்னரும், மதுக்கூர் ஜமீன்தாருமான பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து போட்டிகளை தொடங்்கி வைத்தனர். முன்னதாக மாமன்னர் பூலித்தேவன் நினைவு அறக்கட்டளை மற்றும் பாசறை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

பரிசு

மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றன. இதில் மொத்தம் 56 வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவதாக அவனியாபுரம் மோகன் சாமி குமார் வண்டியும், 2-வதாக கொட்டணிப்பட்டி சீமான் பார்த்தசாரதி வண்டியும், 3-வதாக தேவாரம் கப்பை வியாபாரி பாண்டி வண்டியும் வெற்றி பெற்றன. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மனோஜ் வண்டியும், 2-வது பரிசு அப்பன் திருப்பதி ராகுல், 3-வது பரிசு சின்ன மாங்குளம் மணிமாலா கலையரசன் வண்டியும் பெற்றன.

சின்ன மாட்டுவண்டி 2-வது போட்டியில் முதல் பரிசு கீழவளவு சக்தி அம்பலம் வண்டியும், 2-ம் பரிசு புலி மலைப்பட்டி முனுசாமி வண்டியும், 3-வதாக நகரம்பட்டி காரிங்குளம் காரியங்குடி காசி பிரபா மோட்டார்ஸ் வண்டியும் பெற்றன. விழா ஏற்பாடுகளை அ.காளாப்பூர் மாமன்னர் பூலித்தேவன் நினைவு அறக்கட்டளை மற்றும் பாசறை உறுப்பினர்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்