தேவகோட்டை
தேவகோட்டை அருகே திருவேகம்புத்தூரை அடுத்த ரவியமங்கலம் கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் திருவேகம்புத்தூர்-தொண்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 56 வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்மாள் மற்றும் கருப்பூர் வீரைய்யா வண்டியும், 2-வது பரிசை கொட்டக்குடி முத்துராமன் மற்றும் பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத் தேவர் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை ரோகன் மற்றும் ஆட்டுக்குளம் பாபு வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 36 வண்டிகள் கலந்து கொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற முதல் பிரிவில் முதல் பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 2-வது பரிசை தேவகோட்டை பிரசாத் மொபைல்ஸ் மற்றும் பாகனேரி பிரதாப் வண்டியும், 3-வது பரிசை கணக்கன்பட்டி சற்குரு வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை ரவியமங்கலம் சுந்தர் மற்றும் வானக்கருப்பு செல்வேந்திரன் வண்டியும், 2-வது பரிசை குமணந்தொழு மஸ்வந்த் வண்டியும், 3-வது பரிசை பீர்கலைக்காடு பெரியசாமி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.