கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

காளையார்கோவில் மற்றும் சிவகங்கை பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2022-08-17 16:39 GMT

காளையார்கோவில்,

காளையார்கோவில் மற்றும் சிவகங்கை பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காளையார்கோவில் அருகே கண்டுப்பட்டி செங்குளிப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கண்டுப்பட்டி-நாட்டரசன்கோட்டை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 30 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி, சின்னமாட்டு வண்டி என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நாட்டரசன்கோட்டை ஆண்டி வண்டியும், 2-வது பரிசை திருவாதவூர் தன்வந்த் மற்றும் அறந்தாங்கி ஜே.கே. டிராவல்ஸ் வண்டியும், 3-வது பரிசை தேனி மாவட்டம் மார்க்கயன்கோட்டை சின்னு வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேலூர் சொக்கம்பட்டி செந்தில் மற்றும் ஊடுசேரி சந்தானி வண்டியும், 2-வது பரிசை மாம்பட்டி செல்வேந்திரன் மற்றும் கண்டுப்பட்டி பாண்டி பிரதர்ஸ் வண்டியும், 3-வது பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி மற்றும் கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும் பெற்றது.

சிவகங்கை

சிவகங்கை அருகே டி.உசிலங்குளம், உடையநாதபுரம், கருக்காபள்ளம் ஆகிய கிராம மக்களின் குலதெய்வ வழிபாடு நிகழ்ச்சியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மாடக்கோட்டை விலக்கு-மானாமதுரை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 34 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி, சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை காரைக்குடி ரிதன்யாஸ்ரீ வண்டியும், 2-வது பரிசை கொடிமங்கலம் திருப்பதி வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 22 வண்டிகள் கலந்துகொண்டதில் முதல் பரிசை மாங்குளம் தெய்வேந்திரன் மற்றும் இளங்கிப்பட்டி அர்ச்சுனன் வண்டியும், 2-வது பரிசை கொட்டக்குடி அஜித்பாலுசாமி மற்றும் அப்பன்திருப்பதி ராகுல் வண்டியும், 3-வது பரிசை மதகுபட்டி கணேஷ்போர்வெல்ஸ் மற்றும் புதுப்பட்டி அசீக்ராஜா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்