கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-07-04 18:45 GMT

காரைக்குடி,

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் அருகே பனங்குடி பெரியநாயகி அம்மன் கோவில் ஆனி தேர்த்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பனங்குடி-கண்டுப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வண்டிகள் கலந்துகொண்டு நடுமாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை புதுசுக்காம்பட்டி கவின்வசந்த் வண்டி பெற்றது. பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 42 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா வண்டியும், 2-வது பிரிவில் முதல் பரிசை மேலப்பூங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் வண்டியும் பெற்றது.

இதேபோல் கண்டுப்பட்டி குடியிருப்பு காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கண்டுப்பட்டி-பாகனேரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 21 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டதில் முதல் பரிசை சின்னமாங்குளம் அழகு மற்றும் நாட்டரசன்கோட்டை பழனி வண்டியும், சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டதில் முதல் பரிசை புதுசுக்காம்பட்டி அதிபன் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

கல்லல் அருகே பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பாகனேரி-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 52 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டதில் முதல் பரிசை பாகனேரி தொழிலதிபர் புகழேந்தி வண்டியும், நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டதில் முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 31 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை பொன்குண்டுப்பட்டி செல்லையா வண்டியும், 2-வது பிரிவில் முதல் பரிசை நெற்புகப்பட்டி சதீஷ்குமார்ரிதன்யா வண்டியும் பெற்றது. இதை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டிகளை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.

அதேபோல் சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு 2 பிரிவு என 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகளும், சிறிய மாட்டில் முதல் பிரிவில் 10 வண்டிகளும், 2-வது பிரிவில் 11 வண்டிகளும் கலந்து கொண்டன. பந்தயத்தை பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறிய மாட்டு வண்டி பந்தயத்தின் முதல் போட்டியை ஞானி செந்தில், பொன் சரவணன், செந்தில் ஆகியோரும், 2-வது போட்டியை ரவி பாலா பிரகாஷ், ஆர்.எம்.எஸ்.புசலியம்மாள் மருத்துவமனையின் மருத்துவர் அருள்மணி நாகராஜன், தொழில் அதிபர் அஜய் பெருமாள் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்