முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.;

Update: 2023-06-28 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே இளங்குடி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் இளங்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் மொத்தம் 17 வண்டிகள் கலந்துகொண்டன. போட்டி பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டன.

இந்த போட்டியில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் ஆசிரியர் விஜயவேல் மற்றும் திருவாதவூர் தன்வந்த்பிரசாத் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தாம்பட்டி பாலு மற்றும் கயத்தார் காந்திராஜன் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டன. இந்த போட்டியில் முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும், 2-வது பரிசை தேவகோட்டை லெட்சுமணன் மற்றும் இளங்குடி அருண் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை திருவாதவூர் கார்த்திகேயன் வண்டியும் பெற்றது.

இதை தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்