அரிமளத்தில் மாட்டு வண்டி பந்தயம்
அரிமளத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.;
அரிமளத்தில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 50 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை அவனியாபுரம் மோகனும், 2-ம் பரிசை சண்முகபுரம் விஜயகுமாரும், 3-ம் பரிசு கம்பம் பாலுவும், 4-ம் பரிசு கொத்தமங்கலம் சேகர் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் அதிக மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் பந்தயமானது இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை மாங்குடி பிரகாஷ், சண்முகபுரம் விஜயகுமார், 2-ம் பரிசு கூடல்நானல் பாரிவள்ளல், பூக்கொல்லை ரித்தீஸ்வரன், 3-ம் பரிசு கம்பம் பேச்சியம்மன், மணமேல்குடி நண்பன் கோழிப்பண்ணை, 4-ம் பரிசு பீர்க்களைகாடு பெரியசாமி, திருப்பந்துருத்தி ஆனந்தன் அய்யனார் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.