மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-06-05 18:19 GMT

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அரிமளம் சேத்துமேல் செல்ல அய்யனார், முத்து பாலுடைய அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 54 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கு பெற்றன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் முதல் பரிசு மாவூர் ராமச்சந்திரன், 2-ம் பரிசு தேனி தேவாரம் பாண்டி, 3-ம் பரிசு பூவாண்டி பட்டி நாச்சியார், 4-ம் பரிசு கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.

நடு மாடு பிரிவு

இதனை தொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் 19 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தய தொலைவு போய் வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசு கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், 2-ம் பரிசு புலிமலைப்பட்டி முனிசாமி, 3-ம் பரிசு அரிமளம் சேத்து மேல் செல்ல அய்யனார், 4-ம் பரிசு காட்டுக்குளம் பாபு ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன. சிறிய மாடு பிரிவில் 26 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

பரிசு

இதில் முதல் பரிசு அரிமளம் டைலர், சிராயன்பட்டி பாப்பாத்தி, 2-ம் பரிசு அரிமளம் சேத்து மேல் செல்ல அய்யனார், பரளி எஸ்.ஆர். குரூப்ஸ், 3-ம் பரிசு வேலங்குடி சோலை ஆண்டவர், வெளிமுத்தி வாகினி, 4-ம் பரிசு அரிமளம் சேத்து மேல் செல்ல அய்யனார், மூக்குடி தானிய லட்சுமி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.

தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற அரிமளம் - ராயவரம் சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்