மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2023-10-01 17:54 GMT

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.இரட்டை மாட்டு வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தய எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன.

பரிசு

பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசாக வெள்ளி தட்டு வண்டி மற்றும் வெள்ளி தார்கம்பு வழங்கப்பட்டது. பந்தயத்தை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்