மகுடஞ்சாவடி அருகே கோவில் திருவிழாவில் எருதாட்டம்

மகுடஞ்சாவடி அருகே கோவில் திருவிழாவில் எருதாட்டம் நடந்தது.

Update: 2022-09-03 20:38 GMT

இளம்பிள்ளை:

மகுடஞ்சாவடி அருகில் கூடலூர் முத்து முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து முனியப்பனை வழிபட்டனர். மேலும் முத்து முனியப்பன் கோவிலில் எருதாட்டம் நடைபெற்றது. இதற்காக 30-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்பட்டு எருதாட்டம் நடத்தப்பட்டன. இதில் இளைஞர்கள் உற்சாகமுடன் வடம்பிடித்து எருதாட்டினர். இதனை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்