திண்டுக்கல்லில் கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலன், துணை செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள், கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கட்டுமான தொழிலாளர்கள் வேலையின் போது விபத்தில் சிக்கினால் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.