புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும்

புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும் என்று மேயர் மகேஷ் கூறினார்.

Update: 2023-03-14 18:45 GMT

நாகர்கோவில்:

புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும் என்று மேயர் மகேஷ் கூறினார்.

தூய்மை

நாகர்கோவில் மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைகளை சேகரிப்பதற்காக ரூ.2.19 கோடியில் 6 டெம்போக்கள், 9 ஆட்டோக்கள், 15 மினி டெம்போக்கள் என மொத்தம் 30 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் தொடக்க நிகழ்ச்சி மாநகராட்சி புதிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் மற்றும் ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

புத்தன் அணை

நாகர்கோவில் மாநகராட்சியை தூய்மையான மாநகராக வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஏற்கனவே 45 வாகனங்கள் ஈடுபட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 30 வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகர் நல அதிகாரி ராம்குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்