பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க விழா
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க விழா நடந்தது.
கோவில்பட்டி. (கிழக்கு):
கோவில்பட்டியில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தின் 15-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் மகேந்திரமணி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலாளர்கள் சுப்பையா, கோலப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொம்மை ஆரோக்கியம் சங்கக் கொடியை ஏற்றினார். கந்தசாமி இனிப்புகளை வழங்கினார். சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், முத்துராமலிங்கம், பரமசிவம், அர்ச்சுனன், கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை உதவி செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.