கோவை
ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த அனைத்து இயக்கங்கள் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அதை மீறி தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.டி.பி.ஐ. உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று மாலை பி.எஸ்.என். எல். அலுவலகம் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர செயலாளர் சாஜித் தலை மை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சுகி கலையரசன், ஆறுச்சாமி, வெண்மணி, ரவிக்குமார், நேருதாஸ், முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.