பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் போராட்டம்

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-31 19:02 GMT


விருதுநகர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ேபாராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிளைச்செயலாளர் பொன்ராஜ், சிவகாசி கிளைச்செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மகாலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். இந்த போராட்டத்தின் போது 2017 முதல் 15 சதவீத பென்ஷன் உயர்வு வழங்க வேண்டும். பென்ஷன் மற்றும் சம்பள உயர்வில் இருந்து பிரித்து வழங்க வேண்டும். அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் விருதுநகர் கிளை செயலாளர் சங்கையா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்