பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி

நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி நடத்தினர்.

Update: 2023-06-01 18:55 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4-ஜி மற்றும் 5-ஜி சேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 1.1.2017 முதல் வழங்கப்பட வேண்டிய 3-வது ஊதிய திருத்தத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றி விரைவாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கான புதிய பதவி உயர்வு கொள்கையை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ராஜகோபால், சீதாலட்சுமி, டேனியல் முத்துராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் என்.எப்.டி தொழிற்சங்க தலைவர் இசக்கி முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்