பிரையண்ட் பூங்கா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-20 19:00 GMT

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பணியாற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். இதில் நீலகிரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் அங்கம்மாள் இறந்ததை கண்டித்தும், அவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், அரசு தோட்டக்கலைத்துறைக்கு உட்பட்ட பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். பின்னர் இறந்த ஊழியருக்கு சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கொடைக்கானல் நகர நிர்வாகிகள் கோபுராஜ், பிரைட், கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்