நெல்லை அருகே அண்ணன்-தம்பி தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே அடுத்தடுத்து அண்ணன்-தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-10-08 19:58 GMT

மானூர்:

நெல்லை அடுத்துள்ள மானூர் அருகே உள்ள அயூப்கான்புரத்தை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவரது மனைவி செல்லத்தாய். இவர்களுக்கு சுடலை மணி (25), நாராயண பெருமாள் (15) ஆகிய 2 மகன்கள் உண்டு. அய்யாத்துரை இறந்துவிட்டதால் செல்லத்தாய் கூலி வேலைக்கு சென்று வந்தார். மேலும், சுடலைமணி ஒரு டைல்ஸ் கடையில் வேன் டிரைவாக உள்ளார். நாராயண பெருமாள் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நாராயண ெபருமாள் தனது நண்பர்களுடன் சேர்ந்து சில தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது அண்ணன் சுடலைமணி, தம்பியை கண்டித்து அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த நாராயண பெருமாள் நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த சுடலைமணி போலீசார் தன்னை விசாரணைக்கு அழைத்து சென்றுவிடுவார்கள் என்ற பயத்திலும், தம்பி இறந்துவிட்டதால் மனமுடைந்தும் வீட்டின் வெளியே முற்றத்தில் உள்ள தகரக்கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக மானூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 ேபரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை அருகே அண்ணன்-தம்பி அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்