பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட அண்ணன்- தம்பி கைது

குடியாத்தம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-07 19:01 GMT

குடியாத்தம் அருணாசலநகர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு இரவு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த அனிதா என்பவரின் கழுத்தில் இருந்த 2½ பவுன் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்டது பள்ளிகொண்டாவை அடுத்த கீழ்வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிரஞ்சன் (வயது 25), பொய்கை பகுதியில் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக உள்ளார். இவரது தம்பி நிதீஷ்குமார் (21) என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீதாஞ்சலி என்பவரிடம் 7 பவுன் நகை, அரசு மருத்துவமனை செவிலியர் சுதாவிடம் 6½ பவுன் நகை, சாவித்திரி என்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்ததும், நேற்று முன்தினம் குடியாத்தம் அரசு மருத்துவமனை தெருவில் ஆரிப் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 5 ஆயிரம் ரூபாய் பரித்து சென்றதும் தெரியவந்தது.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் 10½ பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள, ரூ.1,000 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அண்ணன் தம்பியை கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் கைது செய்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்