கஞ்சா வைத்திருந்த அண்ணன்-தம்பி கைது

குடியாத்தத்தில் கஞ்சா வைத்திருந்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-14 13:33 GMT

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், காவலர்கள் மோசஸ், ஜெயக்குமார் ஆகியோர் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் சுடுகாடு பகுதியில் சோதனை செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 பேர் ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனை செய்த போது, கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், குடியாத்தம் ஷெரிப் நகரை சேர்ந்த யாசின் மகன்கள் சதாம் உசேன் (வயது 28), காஜா என்கிற காதர்பாட்ஷா (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது ெசய்து, அவர்களிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்