நில மோசடி; அண்ணன்-தம்பி கைது

நில மோசடி வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-13 21:55 GMT

நெல்லை பாளையங்கோட்டை ரகுமத் நகரை சேர்ந்தவர் ஸ்டெல்லா முத்துகுமார். இவருக்கு சொந்தமான 17.86 செண்டு நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் 10 செண்டை பாளையங்கோட்டையை சேர்ந்த அண்ணன்- தம்பியான பாரூக் மைதீன், பிலால் ஆகியோருக்கு விற்பனை செய்தார்.

ஆனால் அவர்கள் அருகே கிடந்த சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள இடத்தையும் போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பாரூக் மைதீன், பிலால் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்