சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-04 16:29 GMT

திண்டுக்கல் அருகே உள்ள சி.டி.ஓ. காலனியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 33). இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவருடைய தம்பி மதன்குமார் (30). இவர்களுக்கிடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மதன்குமார், தான் வைத்திருந்த கத்தியால் மனோஜை குத்தினார். படுகாயம் அடைந்த மனோஜை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு மதன்குமாரை கைது செய்தனர்


Tags:    

மேலும் செய்திகள்