தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பி கைது
தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பி கைது
கபிஸ்தலம் அருகே உள்ள ஆதனூர் பாரதியார் காலனி தெருவில் வசிப்பவர் செல்வம். இவரது மகன் பிரபாகரன் (வயது 34). விவசாய கூலித்தொழிலாளி. இவரது தம்பி பிரகாஷ்( 27). இவர்களுக்கு இடையே இடம்-பணம் கொடுத்து வாங்கியதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் பிரபாகரனை தகாத வார்த்தையால் திட்டி கையில் வைத்திருந்த அரிவாளால் பிரகாஷ் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பிரபாகரனை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பிரபாகரன் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.