அண்ணன் கையை வெட்டிய தம்பி கைது

அண்ணன் கையை வெட்டிய தம்பி கைது

Update: 2022-12-28 18:34 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியை சேர்ந்தவர் செல்வம்(வயது 36). இவரது தம்பி குமார்(30). இவர் நேற்று அண்ணன் செல்வத்துடன் குடிபோதையில் தகராறு செய்தார்.. இதில் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் குமார் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அண்ணன் செல்வத்தின் வலது கையை குமார் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த செல்வம், சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்கு பதிவு குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்