விவசாயியை தாக்கிய தம்பி கைது

அய்யலூர் அருகே, விவசாயியை தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-19 16:37 GMT

அய்யலூர் அருகே உள்ள அய்யனாம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). விவசாயி. அவருடைய தம்பி பரமன் (50). இவர்களுக்கிடையே ெபாதுக்கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கிணற்றில் இருந்த குழாய்களை பரமன் உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமசாமி பரமனிடம் தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பரமன், ராமசாமியை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த ராமசாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் வடமதுரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து பரமனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்