போலி ஆவணம் மூலம் நிலம் அபகரித்த அண்ணன், தம்பிக்கு சிறை

தேனி அருகே போலி ஆவணம் மூலம் நிலம் அபகரித்த அண்ணன், தம்பிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-07-24 21:00 GMT

தேனி அருகே ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த கோட்டைச்சாமி மகன் அதிகாரி. இவருக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த அவருடைய உறவினர் வீரணன், அவரது மகன்கள் ஜானகிராமன், கார்த்திக் பாண்டி ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவில் அதிகாரி புகார் கொடுத்தார். அதன்பேரில் வீரணன், ஜானகிராமன், கார்த்திக் ஆகிய 3 பேர் மீதும் கடந்த 2014-ம் ஆண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து வந்தபோது, வீரணன் இறந்து விட்டார்.

இந்தநிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு லலிதா ராணி நேற்று தீர்ப்பளித்தார். அதில், ஜானகிராமன், கார்த்திக்பாண்டி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்