குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஆனைமலை அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

Update: 2022-10-06 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

குழாயில் உடைப்பு

ஆழியாற்றில் இருந்து அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கு மட்டும் தினமும் 90 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. மேலும் சில வார்டுகள், 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பயனடைந்து வருகிறது.

இந்தநிலையில் அம்பராம்பாளையம் மீன்கரை சாலையில் அந்த திட்டத்தின் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. தற்போது குழாய் உடைந்து, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இது கடந்த ஒரு வாரமாக சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதோடு வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வினியோகம் பாதிப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சாலையின் அடியில் பதிக்கப்பட்டு உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நாட்கள் பல கடந்துவிட்டது. ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. கனரக வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால், அந்த உடைப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சீராக குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம். மேலும் விபத்துகள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே வீணாகும் குடிநீரை தடுக்க குழாய் உடைப்பை அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்