வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு

காவேரிப்பாக்கம் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 13 பவுன் நகையை திருடிச்சென்றனர்.

Update: 2023-09-03 18:36 GMT

13 பவுன் நகை திருட்டு

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 63). காவேரிப்பாக்கத்தில் மளிகை கடை நடத்திவருகிறார். இவர் குடும்பத்தினருடன் நேற்று காலை தனது சகோதரர் துரை என்பவரின் மகள் திருமணத்திற்காக ஆரணிக்கு சென்றிருந்தார்.

பின்னர் திருமணம் முடிந்து பிற்பகலில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 13 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.

பட்டப்பகலில் துணிகரம்

திருமணத்திற்கு சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்