வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு
நாகூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகூர்:
நாகூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மீன் வியாபாரி
நாகூர் அருகே சம்பாதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மனைவி பட்டம்மாள் (வயது60). இவர்கள் 2 பேரும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பட்டம்மாள் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
ரூ.1½ லட்சம் திருட்டு
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதை தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது உள்ளே பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பட்டம்மாள் நாகூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.