வீட்டின் பூட்டை உடைத்து ½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

கன்னங்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து ½ கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2022-08-26 22:47 GMT

கன்னங்குறிச்சி:

கன்னங்குறிச்சி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் இவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ½ கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இதனிடையே ராஜாவின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். பின்னர் தனது வீட்டில் திருட்டு போனது குறித்து அவர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்