வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள அழகியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குருவம்மாள் (வயது 50). தற்போது வெயில் காலம் என்பதால் குருவம்மாள் மற்றும் அவரது மகளும் வீட்டை பூட்டுவிட்டு இரவு வீட்டின் மாடியில் தூங்க ெசன்றனர். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருவம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1½ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குருவம்மாள் அளித்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.