சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 34). இவர் தனது குடும்பத்துடன் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்வையிட்டார். இதில் பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீதர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.