வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.;
கரூர் காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 28). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து சசிகுமார் பார்த்தார். அப்போது வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் சசிகுமார் அலமாரியில் வைத்திருந்த 5½ பவுன் தங்கநகைகளை மர்மநபர்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சசிகுமார் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் எடுக்கப்பட்டது. இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.