வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

Update: 2022-11-25 18:45 GMT

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கீழையூர் போலீஸ் சரகம் திருப்பூண்டி காரைநகர் பகுதியை சேர்ந்தவர் உஷா (வயது52). இவர் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 2 மர்மநபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது சத்தம்கேட்டு விழித்துபார்த்த உஷாவை மர்மநபர்கள் கத்தியால் கிழித்தனர். பின்னர் பீரோவில் இருந்த 4 பவுன் நகையை திருடிச்சென்றனர். இதில் காயம் அடைந்த உஷா நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழையூர் போலீசில் உஷா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்