வீட்டின் பூட்டை உடைத்து 2¼ பவுன் தங்க நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 2¼ பவுன் தங்க நகை திருட்டு போனது.
செம்பட்டிவிடுதி அருகே வாராப்பூர் ஊராட்சி மேலப்புலவன்காடு காலனி தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த தங்க செயின், தோடு உள்ளிட்ட 2¼ பவுன் கொண்ட தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகேசன் செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.