வீட்டின் பூட்டை உடைத்து 4¾ பவுன் நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 4¾ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-23 19:56 GMT

வீட்டின் பூட்டை உடைத்து 4¾ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மகள் வீட்டுக்கு...

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி மல்லிகா (வயது 56). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒரு மகள் மூவானூரிலும், மற்றொரு மகள் திருவானைக்காவலிலும் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் சுப்பிரமணி இறந்ததால் மல்லிகா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் திருவானைக்காவலில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக மல்லிகா கடந்த 17-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் மல்லிகா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

நகை-பணம் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 4¾ பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்து மல்லிகா மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்