வீட்டின் கதவை உடைத்து பித்தளை பொருட்கள் திருட்டு

தட்டார்மடம் அருகே வீட்டின் கதவை உடைத்து பித்தளை பொருட்கள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-08-19 15:03 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே கீழ நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டை உறவினர் பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் சித்திரைவேலின் வீட்டில் மின்விளக்குகளை அணைப்பதற்காக உறவினர் சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. சித்திரைவேலின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து திறந்து பித்தளை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்