பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு

பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றனர்.

Update: 2023-07-29 18:56 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 68). விவசாயியான இவர் இருக்கன்குடி கோவிலுக்கு சென்றார். அவரது மனைவி அய்யம்மாள் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். வேலையை முடித்துவிட்டு அய்யம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து மாரிச்சாமி பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்