மளிகை கடையை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு
புதுக்கோட்டையில் மளிகை கடையை உடைத்து ரூ.1½ லட்சத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.
புதுக்கோட்டை:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, அரசு ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 47). இவர் புதுக்கோட்டை பஜாரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் ராஜ்குமார் கடையை திறக்க வந்த போது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் உள்ளே சென்று பார்த்தாராம். அங்கு கடையில் பணப் பெட்டியில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்மநபா் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.