திருமணம் ஆன 45 நாளில் புதுப்பெண் தற்கொலை

திருமணம் ஆன 45 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-17 22:10 GMT

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது25). கோழிபண்ணை மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த மோனிஷா (23) என்பவருக்கும் திருமணம் ஆகி 45 நாட்கள் ஆகிறது. ஆடிபண்டிகைக்கு தாய் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். மோனிஷா உடல்நலம் சரி இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் மோனிஷா பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் விரைந்து வந்து மோனிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மோனிஷா தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மோனிஷா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்